Thursday, July 29, 2010

புரொபசனல் பிடிஎப்-வேர்டு கன்வெர்ட்டர் இலவசம்


நாம் இன்று பார்க்கபோவது பிடிஎப் பைலை எப்படி வேர்டுக்கு மாற்றுவது இனையத்தில் தேடினால் ஆயிரம் மென்பொருள் கிடைக்கும் ஆனால் அதில் பல மென்பொருள்களும் பணம் செலுத்தி பெற வேண்டியிருக்கும் சில மென்பொருகள் இன்னும் சிலர் பணம் செலுத்தி பெறவேண்டியதை கிராக் செய்து வைத்திருப்பார்கள் நான் உங்களுக்கு தரப்போவது இந்த வகையை சேர்ந்ததுதான். முதலில் பிடிஎப் – வேர்டு மென்பொருளை இங்கு தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும் அதனுள்ளே அதற்கான கீஜெனரேட்டரும் இனைத்துள்ளேன் அந்த கீஜெனரேட்டரை இயக்கி அதில் ஜெனரேட் என்பதை கிளிக்கி அந்த சீரியல் எண்ணை காப்பி எடுத்து உங்கள் மென்பொருளில் ஒட்டவும் மின்னஞ்சல் முகவரி கொடுக்க தேவையில்லை அந்த இடத்தில் ஏதாவது ஒரு எழுத்தோ அல்லது பெயரோ கொடுத்தாலும் போதும்.


இனி அந்த மென்பொருளில் File என்பதில் Preference திறக்கவும் அந்த புதிய பக்கத்தில் Merge pictures into background என்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்து விடவும்


இதன் செய்வதால் நீங்கள் மாற்ற விரும்பும் பிடிஎப் பைல் போட்டோ உள்ளதாக இருந்தாலும் அதையும் அழகாக மாற்றி எடுப்பதற்கு தான் இனி நீங்கள் விரும்பும் பிடிஎப் பைலை கன்வெர்ட் செய்யுங்கள் அது எத்தனை பக்கங்களாகவும் இருக்கலாம் அதெல்லாம் இவனுக்கு ஒன்றும் பிரச்சினையே இல்லை ஆனால் ஒரு வருத்தமான செய்தி தமிழ் பிடிஎப் என்றால் எழுத்துருவில் பிரச்சினை இருக்கிறது.

போட்டோக்களில் தேதி மற்றும் பெயர் கொண்டுவர

சில போட்டோக்களில் அந்த புகைப்படம் எடுத்த தேதி அல்லது அந்த புகைப்படம் பற்றிய சிறு குறிப்பு எழுதிவைத்தால் நன்றாக இருக்கும்.ஆனால் அதற்கு போட்டாஷாப் தேவை.ஆனால் போட்டோஷாப் உதவியில்லாமல் நமது புகைப்படங்களில் பெயர் மற்றும் தேதியை இந்த சாப்ட்வேர் மூலம் கொண்டு வரலாம்.முதலி்ல் இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.800 கே.பி. கொள்ளளவு தான் இது. இதனை பதிவிறக்கி இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் இடதுபக்க மூலையில் உங்கள் கணிணியில் உள்ள டிரைவ்கள் காண்பிக்கும். அதில் புகைப்படங்கள் உள்ள டிரைவை தேர்வு செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


அதில் புகைப்படத்தை தேர்வு செய்தால் வலதுபக்கத்தில் புகைப்படம் தேர்வாகும். இதில் அதன் ஆறு பக்கங்களிலும் ரேடியோ பட்டன் இருக்கும். அதில நீங்கள் எதை கிளிக் செய்கின்றீர்களோ அந்த இடத்தில் நீங்கள் விரும்பும் பெயரோ - தேதியோ கொண்டுவரலாம். அதைப்போல் Signature என்பதின் கீழே உள்ள தேதியை தேர்வு செய்தால் புகைப்படம் எடுக்கப்பட்ட தேதி தானாக வரும். அதுஇல்லாமல் நீங்கள் உங்கள் பெயரையோ அல்லது புகைப்படத்தை பற்றிய குறிப்பையோ குறிப்பிட விரும்பினால் Your Test என்கின்ற ரேடியோ பட்டனை தேர்வு செய்து கீழே உள்ள பாண்ட் மற்றும் அளவு மற்றும் நிறங்களை தேவைக்கு ஏற்றவாறு கொண்டுவரலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.


இதில் ப்ரிவியுவும் பார்க்கும் வசதி உள்ளது. மாற்றங்கள் வேண்டுமானால் ப்ரிவியு பார்த்து செய்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
பயன்படுத்திப்பாருங்கள்

அனைத்துவிதமான பைல்களையும் துண்டுதுண்டாக பிரிக்க - சேர்க்க

சினன சின்ன சாப்ட்வேர்கள் நம்மை பலசமயம் வியப்பதில் ஆழ்த்தும். அந்த வரிசையில் இந்த் சாப்ட்வேரும் சேர்கின்றது. 444 கே.பி. அளவில் உள்ள இது நமக்கு பெரிய பெரிய வேலைகளை செய்கின்றது. உங்களிடம் உள்ள பைல்கள் - புகைப்படங்கள் - விடியோக்கள் என எந்த பைலையும் நீங்கள் விரும்பும் அளவிற்கு துண்டுகளாக்கி பின்னர் மீண்டும் அதை முழு பைல்களாக மாற்றி தருகின்றது. ஒரு பெரிய பைலை நீங்கள் மற்றவருக்கு அனுப்ப வேண்டும். இதன் மூலம் துண்டு துண்டாக்கி சுலபமாக அனுப்பலாம்.இது பைல்களை .hkc மற்றும்.hkm பைல்களாக மாற்றிவிடுகின்றது. இதில் .hkm பைல்தான் முக்கியமானது. மீண்டும் நீங்கள் பைல்களை ஒன்று சேர்ககும்போது இந்த .hkm பைலை கிளிக் செய்தால் போதுமானது.உங்களிடம் முக்கியமான பைல் இருக்கின்றது. அதை இந்த சாப்ட்வேர் மூலம் துண்டுகளாக்கி பின்னர் இந்த .hkm பைலை மட்டும் நீங்கள் தனியே வைத்துவிடலாம். மற்றவர்களால்.hkm இல்லாமல் இந்த பைலை படிக்க முடியாது. இந்த சாப்ட்வேரை பயன் படுத்தும் முன் இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இதை பதிவிறக்கம் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் முதலில் Split File கிளிக் செய்து பின்னர் Set Size கிளிக் செய்யவும் .உங்களுக்கு கீழ்கணட விண்டோ ஓப்பன ஆகும். அதில் நீங்கள் பைல்களை எத்தனை கே.பி. அளவிற்கு வேண்டுமோ அந்த் அளவினை செட் செய்யவும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.


பின்னர் ஓ.கே. தரவும் அடுத்து நீங்கள் துண்டுகளாக்க விரும்பும் பைல் உள்ள டிரைவினை Choose File மூலம் தேர்வு செய்யவும்.அடுத்து அதன் கீழே உள்ள Start Spliting or Joining கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
ரைட் துண்டுகளாக்கி விட்டீர்கள். இப்போது மீண்டும் இதை சேர்க்க வேண்டும். மீண்டும் இந்த சாப்ட்வேரை திறந்து கொண்டு முன்பு செய்தவாறு செய்யவும்.இப்போது Join Fils எதிரில உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்யவும். பைலை தேர்வு செய்யவும். நீங்கள் சேமித்து வைத்துள்ள இடத்தில் இருந்து .hkm பைலை மட்டும் கிளிக் செய்யுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.


அவ்வளவுதாங்க. உங்கள் பைல் முழுமையாக உங்களுக்கு கிடைத்துவிடும். உபயோகித்துபாருங்கள்.

பிடிஎப் பில் வாட்டர் மார்க் வரவழைக்க

வேர்டில், எக்ஸெல்லில்,புகைப்படங்களில் வாட்டர்மார்க் பார்த்திருக்கின்றோம். இன்று பிடிஎப் பைல்களில் வாட்டர்மார்க் போடுவது எப்படி என்று பார்க்கலாம்.900 கேபி அளவுள்ள இந்த சாப்ட்வேரை பதிவிறககம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் முதலில் உள்ள PDF File எதிரில் உள்ள Open கட்டத்தில் உங்கள் பிடிஎப் பைல் எங்கு உள்ளதோ அதை தேர்வு செய்யுங்கள். அடுத்துள்ள விண்டோ பாக்ஸில் நீங்கள் வாட்டர்மார்க்காக பதிவு செய்ய விரும்பும் வார்த்தைகளை தட்டச்சு செய்யவும்.அதற்கு கீழே உள்ள அங்கிள் என்பதில் வார்த்தையின் கோணத்தை தேர்வு செய்யுங்கள்.அதைப்போல அடுத்துள்ள பெட்டிகளில் உள்ளவாறு பாண்ட் அளவு -நிறம் - அளவு ஆகிய அனைத்தையும் தேர்வு செய்துகொள்ளுங்கள். இறுதியாக சேமிக்கும் இடததையும் தேர்வு செய்து ஒ.கே.தாருங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.


இதில நீங்கள் தேர்ந்தெடுக்கும் நிறமானது கிரே கலரில் இருந்தால் கண்ணை உறுத்தாது.பதிவிற்காக நான் சிகப்பு நிறத்தை உபயோகித்துள்ளேன்.பதிவினை பாருங்கள்.


நமது கணிணியில் உள்ள சாப்ட்வேர்களின் கீ -யை கண்டுபிடிக்க


நமது கம்யுட்டரில் ஓ,எஸ். முதற் கொண்டு அனைத்து சாப்ட்வேர்களுக்கும் சி.டி.வைத்திருப்போம்.அதன் கீ -யை நாம் சி.டி.யின் மேலேயோ அல்லது சி.டியின் கவரிலோ எழுதி வைத்திருப்போம்.சி.டி.யின் கவர் தொலைந்துவிட்டாலோ சிடியின் மேல் உள்ள எழுத்து அலைந்துவிட்டாலோ நமக்கு சிரமம் தான். அதைப்போல் சாப்ட்வேர் சிடி நம்மிடம் இருக்கும். ஆனால் அதன் கீ நம்மிடம் இருக்காது. அதற்கான் கீ யை கண்டுபிடிப்பது எவ்வாறு? இந்த இக்கட்டான சூழ் நிலையில் நமக்கு உதவ வருகின்றது. இந்த சாப்ட்வேர். 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
இதை கணிணியில் நிறுவியதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் உள்ள Find Keys கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் நம்மிடம் உள்ள சாப்ட்வேர்களின் கீ கள் அனைத்தும் தெரியும். அதை தனியாக வேறு டிரைவிலோ அல்லது தனியே பிரிண்ட் எடுத்தோ நாம் சேமித்துக்கொள்ளலாம் .கீழே உள்ள விண்டோ வினை பாருங்கள்.
அதைப்போல் நமது இணைய இணைப்பின் முகவரியையும் நாம் சுலபமாக அறிந்துகொள்ளலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.

Wednesday, July 14, 2010

ஈமெயில்களை எஸ்.எம்.எஸ் களாகப் பெறுவது எப்படி? (mail alert)

ஈமெயில்கள் நம் அன்றாட வாழ்வில் ஒரு பகுதியாக ஆகிவிட்டன. மொபைல் மூலமே இப்போதெல்லாம் மெயில்களை கையாளுகிறார்கள். blackberry மொபைல்கள் இதற்காகவே பிரபலம் அடைந்திருக்கின்றன. ஆனால் இவற்றிற்கு செலவு அதிகம். மேலும் பலரும் மெயில்களை அலுவலக கணினி மூலமாகவும், இன்டர்நெட் மையங்கள் மூலமாகவுமே பார்க்கிறார்கள். நாம் கணிப்பொறியிலிருந்து தொலைவில் இருக்கும் போது மெயில் வந்திருக்கிறதாவென எப்படி அறிவது?


way2sms தளத்தில் இந்த வசதி இருந்தாலும் mail alertகளை பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை மீண்டும் activate செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எஸ்.எம்.எஸ் களை பெற இயலாது. இவற்றை நிரந்திரமாக மீண்டும், மீண்டும் activate செய்யாமல் பெறுவது எப்படி? இதற்க்கு windows live தளம் உதவுகின்றது. login.live.com பக்கத்திற்கு சென்று windows live id மூலம் லாகின் செய்யுங்கள், அக்கௌன்ட் இல்லையென்றால் sign up செய்து உள்நுழையுங்கள், பின்னர் device பகுதியில் add phone கிளிக் செய்து உங்கள் மொபைல் நம்பர் ஐ உள்ளீடு செய்யுங்கள். இப்பொழுது உங்கள் மொபைலுக்கு verification code அனுப்பப்படும். code ஐ உள்ளிட்டு verify செய்துக்கொள்ளுங்கள். இனி இந்த முகவரிக்கு வரும் மெயில்கள் வந்தால் subject உடன் உங்களுக்கு sms அனுப்பப்படும். நீங்கள் default ஆக வேறு ஈமெயில் அட்ரஸ் களை பயன்படுத்துபவராக இருந்தால் அந்த முகவரியிலிருந்து windows live id முகவரிக்கு மெயில்களை forward செய்துகொள்ளுங்கள் இதன் மூலம் உங்கள் தற்போதைய முகவரிக்கு வரும் மெயில்களையும் sms மூலம் பெறமுடியும். gmail userகள் மெயிலை forward செய்ய settings சென்று Forwarding and POP/IMAP பகுதியில் Forward a copy of incoming mail to இல் ரேடியோ பட்டனை கிளிக் செய்து windows live id ஐ இடவும். இங்கும் உங்கள் மெயிலுக்கு verification code அனுப்பப்படும். அதனை verify செய்து விட்டால் இனி உங்கள் gmail மெயில்களுக்கும் sms அனுப்பப்படும்.

Sunday, July 4, 2010

Deep Freeze கணினியை பாதுகாக்கும் மென்பொருள்


இந்த மென்பொருள் உங்கள் கணினியில் உள்ள தங்கவல்களை அழியாமலும் ஏணையவர்களால் மாற்றப்படாமலும் வைரஸ்களிலிரிந்தும் இலகுவாக பாதுகாக்க உதவிகிறது.

Deep Freeze மென்பொருளை கணினியில் Install செய்து விட்டால் Deep Freeze மென்பொருள் Install செய்யும்போது கணினி எந்த நிலையில் இருந்ததோ அதே நிலையில் கணினியை வைத்திருக்க உதவிகிறது.


" Deep Freeze மென்பொருளை கணினியில் Install செய்யும் போது எந்த எந்த Drive களுக்கு பதியப்பட வேண்டும் என கேட்கப்படும் இடத்தில் C:\ இனை மாத்திரம் தெரிவு செய்து Install செய்து விட்டு Deep Freeze மென்பொருளுக்கு Password ம் கொடுத்து விட்டால் இனியாராலும் C:\ இனுள் மாற்றங்கள் செய்ய முடியாது. எந்தஒரு வைரசும் உங்கள் கணினியை பாதிக்காது. அப்படி ஏதாவது வைரஸ் வந்தால் கவலைப்பட வேண்டியதில்லை ஒருமுறை கண்னியை Restart செய்தால் போதும் C:\ பழைய நிலைக்கு வந்துவிடும்.

C:\ இனுள் மாற்றங்கள் செய்ய வேண்டுமாயின் அல்லது புதிய மெண்பொருள் ஏதாவது Install செய்ய வேண்டுமாயின்
System Tray இல் உள்ள Deep Freeze Icon மீது Shift Key உடன் சேர்த்து இரட்டை Click செய்யவும் Status on next boot எனும் இடத்தில் Boot Thawed என்பதை Click செய்து OK செய்து Restart செய்தபின் C:\ இனுள் தேவையான மாற்றங்களை செய்யலாம்.
C:\ இனுள் தேவையான மாற்றங்களை முடித்தபின் Status on next boot எனும் இடத்தில் Boot Frozen என்பதை Click செய்து OK செய்து Restart செய்யவும்."

இந்த மென்பொருளையே Net Cafe களிலும், கல்வி நிலையங்களிலும், பொது இடங்களில் உள்ள கணினிகளிலும் பயன்படுத்துகின்றனர்.

இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

Deep Freeze

InBox ல் வரும் மின்னஞ்சல்களை குறித்த Folder இனுள் விழச்செய்தல்

பெரும்பாலும் உங்களுக்கு வரும் மின்னஞ்சல்கள் Inbox இலே காணபடும். Facebook, Feed Burner மூலம் பெறப்படும் மின்னஞ்சல்கள், நண்பர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்கள் என எல்லாமே ஒன்றாக காணப்படும் இது நாம் மின்னஞ்சல்களை இலகுவாக ஒவ்வொன்றாக பார்ப்பதற்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும். இவ்வாறு சிரமமிலாமல் குறித்த மின்னஞ்சல் முகவரியிலிருந்து வரும் மின்னஞ்சல்களை வேறு வேறாக குறித்த Folder இனுள் விழச்செய்யும் வசதி Yahoo, Gmail போன்றவற்றில் உள்ளது.

Yahoo வில் Folder அமைப்பதற்கு முதலில் Folders என்னும் பகுதியில் உள்ள Add என்பதை அழுத்தவும் தோன்றும் Folder இற்கு விரும்பிய பெயரைக்கொடுக்கவும். இப்பொழுது Inbox இல் உள்ள குறித்த மின்னஞ்சலை Open செய்யவும் Action என்பதை Click செய்யவும் தோன்றும் Menu வில் Filter Emails Like This... என்பதை Click செய்யவும் Add Filter என்னும் Menu வில் உள்ள Then Move the message to: என்பதன் கீழ் உள்ள -Choose Folder- என்பதில் நீங்கள் Add செய்த Folder இனை Select செய்து Save என்பதை Click செய்ததும் தோன்றும் Menu விற்கு OK என்பதை Click செய்யவும்.

Gmail இல் இதனை செய்வதற்கு மின்னஞ்சலை Select செய்து More actions என்பதை Click செய்யவும் அதில் உள்ள Filter messages like these என்பதை Click செய்ததும் Next step என்பதை Click செய்யவும் Skip in inbox என்பதையும் Apply the label என்பதையும் select செய்து Choose Label என்பதில் new label என்பதை கொடுத்து label இற்கான பெயரையும் கொடுத்து ஒகே இனை கொடுத்து Create Filter என்பதை அழுத்தவும்.

இனி நீங்கள் தெரிவுசெய்த மின்னஞ்சல் முகவரியிலிருந்து வரும் அனைத்து மின்னஞ்சல்களும் நேரடியாக நீங்கள் Add செய்த Folder இனுள்ளேவரும்.இனி உங்கள் Inbox தெளிவாகவும் மின்னஞ்சல்களை இலகுவாகப் படிக்கக்கூடியதாகவும் இருக்கும்.

Friday, July 2, 2010

Pen Drive மூலம் கணிணியில் வைரஸ் தாக்காமல் இருக்க


நம் கணிணியில் பென் டிரைவ் ஐ பயன்படுத்தாமல் இருக்க முடியாது. அப்படி பயன்படுத்தும் போது, வேறு கணிணியில் பயன்படுத்திய பென் ட்ரைவ் ஐ நம் கணிணியில் பயன்படுத்தும் போது, Autorun.ini மூலம் வைரஸ் எளிதாக நம் கணிணியில் நுழைந்துவிடுகிறது. ஆனால் இப்படி கட்டுப்பாடு இல்லாமல் நுழையும் வைரஸ் ஐ, தடுத்து நிறுத்தில் அழிக்கும் வேலையை செய்கிறது ஒரு மென்பொருள்.

USB Disk Security


இந்த மென்பொருள் நம் கணிணியில் நிறுவியிருந்தால், நம் கணிணியில் Pen Drive ஐ பயன்படுத்தும் போது, உடனே Pen Drive ஐ, Scan செய்கிறது. இதன் Full Version இருந்தால் மட்டுமே, Pen Drive ஐ, Scan செய்ய முடியும். Scan செய்யும் போது Auto run, new folder வைரஸ்கள் எத்தனை பட்டியலிடுகிறது. அந்த வைரஸ்களை தேர்வு செய்து, Delete செய்துவிட்டு, எளிமையாக பயன்படுத்தலாம்.


இந்த மென்பொருளை கட்டணம் செலுத்தித்தான் வாங்க வேண்டும். ஆனால் நான் கொடுக்கும் Full Version மூலம் முழுமையாக பயன் அடையலாம்.
இதன் Size : 1 MB
இங்கே தறவிறக்கம் செய்துகொள்ளுங்கள்

USB Disk Security